ஈரம் உங்களுக்குள் இருக்கும் வரை இந்த சமூகம் சுபிட்சமாக இருக்கும். அரசியலோ, ஜாதி, மதமோ எதுவும் இந்த சமுதாயத்தை சீர்கெடுத்துவிட முடியாது என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்கு சினேகனின் தந்தை வந்தபோது போட்டியாளர்கள் அனைவரும் அழுதார்கள். அதை பார்த்த பார்வையாளர்கள் சிலரும் அழுதார்கள்.
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் நிகழ்ச்சியில் கூறியதாவது,
பாராட்டு
பிக் பாஸை பொறுத்த வரை விமர்சனங்களே அதிகமாக இருந்தபோது தற்போது பாராட்டுகள் குவிய ஆரம்பித்துள்ளது. அதற்கு காரணம் உணர்வு. ஆற்றில் தண்ணீர் வற்றிப் போனாலும் உங்கள் மனசில் ஈரம் வற்றவில்லை என்பதற்கான அடையாளங்கள் எல்லாம் எனக்கு தெரிகிறது.
ஈரம்
இந்த ஈரம் உங்களுக்குள் இருக்கும் வரை இந்த சமூகம் சுபிட்சமாக இருக்கும். அரசியலோ, ஜாதி, மதமோ எதுவும் இந்த சமுதாயத்தை சீர்கெடுத்துவிட முடியாது.
தேவைப்படும்
அந்த ஈரத்தை பாதுகாத்து வையுங்கள். அது உங்களுக்கும் தேவைப்படும். உங்களிடம் இருந்து எனக்கும் தேவைப்படும். நான் ஏன் இதை எல்லாம் பேசுகிறேன் என்றால் உங்களைப் போலவே நானும் பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பார்த்து உணர்ச்சிவசப்படுகிறேன்.
கண்ணீர்
யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், இது எல்லாம் டிராமா என்று எகத்தாளமாக கூறியவர்கள் கூட மாறிவிட்டார்கள். கிண்டல் அடித்தவர்கள் கண்ணீர் மல்கிப் போனதை எங்களால் பார்க்க முடிந்தது என்றார் கமல்.