அமெரிக்காவில் 500 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த காரை போலீசார் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை அடுத்த கிங்ஸ் நதியில் கார் ஒன்று விழுந்தது. சுமார் 500 அடி உயரத்தில் இருந்து நதியில் பாய்ந்த காரில் 2 தாய்லாந்து மாணவர்கள் பயணித்தனர்.
5 நாட்களுக்கு பின்னர் உடல்களை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். 9 மணிநேரம் நீட்டித்த மீட்பு பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது என்று பிரஸ்னோ காவல்துறையினர் கூறினர்.
இம்மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் வீடியோவை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
															