தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து தமிழ்நாட்டில் ஓடுகிறதோ இல்லையோ, அமெரிக்காவில் சூப்பர் ஹிட், ஆஸ்திரேலியாவில் பம்பர் ஹிட் என அளந்துவிடுவார்கள். பொதுவாக எந்த பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை வசூல் விவரங்களை ஒரு டாலர் என்றால் கூட அவ்வளவு சரியாகச் சொல்வார்கள்.
ஆனால், ‘விவேகம்’ படத்தைப் பொறுத்தவரையில் படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனம் ‘விவேகம்’ படத்தின் மொத்த வசூல் என்ன என்று இதுவரை சொல்லவில்லை. முதல் நாள் வசூலாக 517000 டாலர்கள் வசூலித்ததாக மட்டுமே அறிவித்தது. அதன் பின் எந்த விவரமும் வரவில்லை.
நாம் விசாரித்தவரையில் படம் அமெரிக்காவில் நஷ்டம் என்கிறார்கள். அதே சமயம் அந்தப் படத்துடன் வெளியான தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ இரண்டு வாரங்களில் 11 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை விட அமைதியாக வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் அமெரிக்காவில் மட்டும் ஐந்து கோடிக்கும் மேல் லாபத்தைக் கொடுத்துள்ளதாம்.