அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
காலிறுதிப் போட்டியில் முன்னாள் முதல்தர வீரரான ரொஜர் பெடரர், 24ஆம் நிலை வீரரான ஆர்ஜன்டீனாவின் ஜூயன் மார்டின் டெல் போர்டோவை எதிர்த்து விளையாடினார்.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் பெடரர் 5–-7, 6–-3, 6–-7, 4–-6 என்ற செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
மற்றொரு காலிறுதியில், ஸ்பெய்னின் ரபேல் நடால் 6–-1, 6–-2, 6–-2 என்ற நேர் செட்களில் இளம் வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவை வென்றார். அரையிறுதியில் நடால், டெல் போர்டோவை எதிர்கொள்கிறார்.

