பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா (Tehmina Janjua) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் அப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு பயணமாகவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன .
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அலங்கையிலுள்ள அரச தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது