Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

August 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும் பிரகாசிக்க, டீம் ப்ளூஸ் அணியை  டீம் க்றீன்ஸ் அணி 4 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த துனித் வெல்லாலகே தலைமையிலான டீம் ப்ளூஸ் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, விஷான் ஹலம்பகே ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2.6 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 10 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களையும் விஷான்  ஹலம்பகே 4 பவுண்டறிகளுடன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

குசல் பெரேரா (24),  தனஞ்சய டி சில்வா (18) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஆனால் அவர்களது ஆட்டம் இழப்புடன் சீரான இடைவெளியில் ஏனைய விக்கெட்கள் சரிந்தன.

மத்திய வரிசையில் அஹான் விக்ரமசிங்க (11), பின்வரிசையில் அக்கில தனஞ்சய (19) ஆகிய இருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவீன் மெத்யூஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

144 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தலைமையிலான க்றீன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

லசித் குரூஸ்புள்ளே (10), காமில் மிஷார (15), சதீர சமரவிக்ரம (6), பானுக்க ராஜபக்ஷ (7), பவன் ரத்நாயக்க (2) ஆகிய முதல் ஐந்து வீரர்கள் 42 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்ததால் டீம் க்றீன்ஸ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் சாமிக்க கருணாரட்ன 6ஆவது விக்கெட்டில் கமிந்து மெண்டிஸுடன் 65 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் துஷான் ஹேமன்தவுடன் 37 ஓட்டங்களையம் பகிர்ந்து க்றீன்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

கமிந்து மெண்டிஸ் 4 பவுண்டறிளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். சாமிக்க கருணாரட்ன 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடனும் துஷான் ஹேமன்த ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெ;களையும் அக்கில தனஞ்சய 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Previous Post

குடும்பத் தகராறு | மனைவியை கொலை செய்த கணவன்

Next Post

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Next Post
வலைத்தள தொடருக்காக டைட்டில் பாடலை பாடிய ஜீ. வி. பிரகாஷ் குமார்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

July 12, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures