OAKVILLE பகுதியில் விபத்து: சைக்கிள் ஒட்டுனர் உயிரிழப்பு
Oakville பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சைக்கிள் ஒட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹல்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Lakeshore வீதியின் மேற்கு மூன்றாவது வீதியிலேயே குறித்த விபத்து இரவு 7 மணியளவில் சம்பவித்துள்ளது.
இவ் விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சைக்கிள் ஒட்டுனரை மருத்துவனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவசர மருத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கதக்கவர் என கூறியுள்ள போக்குவரத்து புனரமைப்பு அணி விசாரணை குழு, எவ்வாறு விபத்து சம்பவித்து ஆகிய காரணங்களை தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்த விசாரணை ஆரம்பகட்டதில் தான் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.