The living period in Canada to become the Citizen of Canada, will be reduced to three years, in 2017. Canada’s Minister of Immigration, Citizenship and Refugees, John McCallum, briefed to Ethnic Media Editors, yesterday in Brampton.
கனடாவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகளில் ஒன்று இ ங்கு நிரந்தர வதிவிட உரிமை பெற்று இங்கு வாழ்ந்த காலம். முன்னர் பிரஜாவுரிமை பெறுவதற்கு வாழ்ந்த காலம் நான்கு வருடங்களாக இருந்தது. ஆனால் அடுத்தவருடம் தொடக்கம அது மூன்று வருடங்களாக குறைக்கப்படும் என்று கனடா வின் குடியுரிமை மற்றும் குடிவரவு, அகதிகள் விவகார அமைச்சர் கௌரவ ஜோன் மெக்கலம் நேற்று பிரம்டன் மாநகரில் நடைபெற்ற பல்லினப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
மேற்படி சந்திப்பின்போது பிரம்டன் மாநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். இந்த ஐவரில் மூன்று பெண் எம்பிக்கள் மற்றும் இரண்டு ஆண்கள். ஐவருமே சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் தனது உரையின்போது நகைச்சுவையாகக் குறிப்பிட்டபோது ” தற்போது எனக்கு சண்டிகாரில் உள்ள கனடிய துாதுவராலயம் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. ஏனெனில் அங்கு செல்லும் விண்ணப்பங்கள் தொடர்பாக இந்த ஐந்துபேரும் (தனக்கு அருகில் இருந்த ஐந்து எம்பிக்களையும் சுட்டிக்காட்டி) தொடர்ச்சியாக தொடர்புகொண்டவண்ணமே இருப்பார்கள்” என்று..
மேற்படி நேற்றைய சந்திப்பில் இந்திய மொழிகள்பல சார்ந்த ஊடகங்களின் ஆசிரியர்களே அதிகளவு கலந்து கொ்ண்டார்கள். ஒரே யொரு தமிழ் ஊடகமாக கனடா உதயன் அங்கு அழைக்கப்பட்டிருந்தது. கனடா உதயன் பத்திரிகையின் தோழமை இணைய ஊடகமான EasyNews24 பிரதிநிதியாக கிருபா கிசான் அங்கு கலந்து கொண்டார்.
கனடா உதயன் செய்திப்பிரிவு