Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி வைத்தியசாலையின் நிரந்தர வைத்திய நிபுணர்களை மாற்ற கோரும் தொழிற்சங்க கடிதத்தால் குழப்பம்

May 3, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் நிரந்தர பொது வைத்திய நிபுணர்களாக கடமையாற்றிவரும் இரு மருத்துவர்களை அங்கிருந்து உடனடியாக மாற்றம் செய்து புதியவர்களை நியமிக்கும் படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அரச மருத்துவர்களது தொழிற்சங்கத்தின் தாய்ச் சங்கமானது கடித மூலம் கோரியுள்ளது. இதனால் வைத்தியசாலை மட்டத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் தம்முடன் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இதனால் ‘கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தடங்கல் ஏற்படுகிறது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்கிலும் கிளிநொச்சியிலும் வாரத்திற்கு இரு நாள் மட்டுமே குறித்த சில வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுவது குறித்து மூச்சும் விடாத தொழிற்சங்கம், தற்போதும் நோயாளர் காவு வண்டிகளில் அனுமதி இன்றி பிற மாவட்டங்களுக்கு சென்று தமது ‘உத்தியோகப்பற்றற்ற’ விடுமுறைகளை கழித்துத் திரும்பும் வைத்தியர்கள் குறித்துக் கண்டும் காணாமல் இருக்கும் தொழிற்சங்கம், கடமையேற்ற காலத்திலிருந்து வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே தங்கியிருந்து கடமையாற்றும் இரண்டு வைத்திய நிபுணர்களை தற்போது குறிவைத்துள்ளமை வைத்தியசாலை மட்டத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் நிரந்தர வைத்திய நிபுணர்கள் கடமையேற்க விரும்பி வராத நிலை தோன்றுவதோடு, வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் சேவைக்கு அனுமதிக்கப்படுவதிலும் தடங்கல்கள் வரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் நிர்வாகத்தில் முதற் தடவையாக தொழிற்சங்க தலையீடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது

குறித்த விடயம் தொடர்பில் தனக்கும் இடமாற்றம் செய்யக் கோரிய கடிதத்தின் பிரதி கிடைக்பெற்றதாகவும், அது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார். இதே விடயம் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களின் தொடர்பை ஏற்டுத்த பல முறை முயற்சி செய்த போதும் அவர் பதிலளிக்கவில்லை.

Previous Post

இலங்கையில் கொரோன 706 ஆக உயர்ந்தது

Next Post

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

Next Post

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures