Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டி.ராஜேந்தர் இயக்கும் ‛இன்னிசை காதலன்’

February 11, 2020
in Cinema
0

ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். கடைசியாக 2007ம் ஆண்டு வீராசாமி படத்தை இயக்கினார். அதன் பிறகு கிராமத்து காதலை மையமாக கொண்டு ஒரு தலை காதல் என்ற படத்தை ஆரம்பித்தார். இதில் டி.ராஜேந்தர் ஜோடியாக மும்தாஜ் நடித்தார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் படத்தை கைவிட்டு விட்டார்.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். படத்திற்கு தலைப்பு இன்னிசை காதலன். இது ஒரு இசை கலைஞனுக்கும், ஒரு மாடல் அழகிக்குமான காதலை சொல்லும் படம். இதில் இசை கலைஞனாக டி.ராஜேந்தர் நடிக்கிறார். மாடல் அழகியாக நமீதா நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர மேலும் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இது தவிர பல புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்.

படத்திற்காக சென்னை, போரூரில் உள்ள அவரது கார்டனில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகிறது. அந்த பாடல் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Previous Post

வசூலை அறிவிக்க தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு?

Next Post

ஏமாற்றிய ‘டகால்டி’, சந்தானம் நம்பும் ‘சர்வர் சுந்தரம்’

Next Post

ஏமாற்றிய 'டகால்டி', சந்தானம் நம்பும் 'சர்வர் சுந்தரம்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures