யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை, சங்கரத்தை சந்தியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்.
அலுவலகம் திறப்பதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினரின் பங்குபற்றலுடன் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

