Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்

December 5, 2019
in News, Politics, Sports
0

இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், சிறந்த நடிகை என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரியான ஜெயலலிதாவின் 3ஆவது நினைவு தினம் இன்றாகும்.

கர்நாடாகாவின் மைசூருவில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி பிறந்த ஜெயலலிதா, நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்த அவர், குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் கால் பதித்தார்.

17 ஆண்டுகள் சினிமாவில் வலம்வந்த இவர் 1972ல் சிவாஜியுடன் நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமாவில் தடம்பதித்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர். இன் வழிகாட்டுதலில் அரசியலில் 1982ல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கால் பதித்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

1984 டிசம்பரில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடந்த லோக்சபா சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. – கூட்டணி வெற்றி பெற்றது. இதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் 1987ல் ஜெயலலிதா – ஜானகி அணிகள் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.

1989 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ‘சேவல்’ சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெயலலிதா தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1989 பெப்ரவரியில் அ.தி.மு.க.வை ஜெயலலிதா ஒன்றிணைத்தார்.

அ.தி.மு.க. கூட்டணி 1991 சட்டசபை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானார். அதன்பின்னர் 2001ல் முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின்னர் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்டம்பர் 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார்.

தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று சினிமாவில் சாதனைப் படைத்த ஜெயலலிதா, இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண்மணி என அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர்.

இவரின் இழப்பு தமிழக மக்களுக்கு மாத்திரமன்றி இந்திய அரசியலுக்கும் பெரும் இழப்பாகவே அமைந்திருந்தது என்பது மறுக்கப்படாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

டெங்கு அபாய எச்சரிக்கை

Next Post

இலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Next Post

இலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures