இரு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுட்டுக்கொலை

இரு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் டமாலிபாஸ் மாகாணத்தின் தலைநகரான சியுடேட் விக்டோரியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு நேற்று அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை துப்பாக்கிகளால் சுட்டனர்.

குறித்த சம்பவத்தில் அனைவரும் உயிரிழந்ததோடு,பலியானவர்களில் 6 சிறுமிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து மற்றொரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஒரு சிறுமி உள்பட 3 பேரை சுட்டுக்கொன்றனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு வீட்டினுள் கையெறி குண்டுகளை வீசி, பின்னர் அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தினர். இதில் யாரும் உயிரிழந்தாக தகவல்கள் இல்லை.

இதற்கிடையில், பஸ் நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக்கொன்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் எந்த ஓர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *