உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாம் நம்புவதாகவும் அதேநேரம், தேர்தலைப் பிற்போட முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்புப் பிரிவினர், பயங்கரவாதிகளை ஒடுக்கியுள்ளனர். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சுமார் 30 பேர் சுதந்திரமாக நடமாடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவர்கள் தற்கொலைதாரிகளா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் இதன்போது ஜனாபதி தெரிவித்துள்ளார்.

