Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நான் அதிக சம்பளம் வாங்குவதில்லை : யோகி பாபு

May 4, 2019
in Cinema
0

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. ராதாரவி, ரேகா, கருணாகரன், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை முத்துக்குமரன் இயக்கி உள்ளார். ரங்கநாதன் தயாரித்துள்ளார். எமதர்மன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

யோகிபாபு பேசும்போது : இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 ஆண்டு நண்பர்கள். ‘லொள்ளு சபா’வில் இருந்து வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது.

இப்படம் நடிக்க தொடங்கியபோது தான் கூர்கா படமும் ஆரம்பமானது. இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம். நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் என்றார்.

Previous Post

ஜூன் 5க்கு தள்ளிப்போன கொலைகாரன்

Next Post

மாமனார் படத்தில் கெஸ்ட் ரோலில் சமந்தா

Next Post

மாமனார் படத்தில் கெஸ்ட் ரோலில் சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures