Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய தவ்ஹீத் ஜமாத் கொழும்பு அமைப்பாளருக்கு விளக்கமறியல்

May 2, 2019
in News, Politics, World
0

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் என்பவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்து, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்குச் சொந்தமான ஆவணங்கள் மற்றும் காணொளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள், குறித்த சந்தேக நபரினால் அவரின் தொலைபேசியில் காணொளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தெற்கிலிருந்து வந்த சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் தொடர்பில் சோதனை

Next Post

ஹட்டனில் யெமன் நாட்டவரின் வீட்டிலிருந்து 9 கத்திகள் மீட்பு

Next Post

ஹட்டனில் யெமன் நாட்டவரின் வீட்டிலிருந்து 9 கத்திகள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures