வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிவந்ததாக சந்தேகிக்கப்படும் 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியாவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று முதல் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை சாவடியினூடாக நகரத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் நகரத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
குறித்த சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் விபரங்கள் மற்றும் இலக்கத்தகடுகளின் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும் சோதனை சாவடிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

