Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை

May 2, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நெருக்கடிகளை வெற்றிகொண்டு அரசாங்கத்தை கைப்பற்றுவோம் – மஹிந்த

Next Post

வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

Next Post

வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures