இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ருவிற்றர் பதிவு, உலகளவில் வைரலாகி வருகிறது. ஒரு சோகமான நிகழ்வின் அஞசலி பதிவென்றாலும், அதில் ட்ரம்ப் செய்துள்ள தவறு, நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை குண்டுவெடிப்புக்களில் 138 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுவதற்கு பதிலாக, 138 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் தவறை திருத்திக் கொண்டு, 138 பேர் உயிரிழந்ததாக பதிவிட்டுள்ளார்.