ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பாட்டால் தான், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பலப்படுத்த முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நேற்று (20) மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஐ.தே.கட்சியில் ரவி- சஜித் கருத்து முரண்பாடு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
அரசியலில் கருத்து முரண்பாடுகள் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும், சமாதானமாக செயற்படுவது தான் கட்சிக்கு சிறந்தது. இருவரினதும் ஒற்றுமையில் கட்சியின் எதிர்கால பலம் தங்கியுள்ளது எனவும் கருஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

