போர்த்துகலில் உல்லாசப் பயணிகளின் பஸ் ஒன்று பாதையைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலா தீவான மடேய்ராவின் சான்ட்ட குரூஸ் நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 பெண்களும் 11 ஆண்களும் உயிரிழந்துள்ளனர் என சான்ட்ட குரூஸ் நகர மேயர் பிலிப் சவ்சா தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அந்த பஸ் பாதையிலிருந்து விலகி வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரம் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் ஜேர்மனியர்கள் என ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

