Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழப்பு

April 18, 2019
in News, Politics, World
0

நாட­ளா­விய ரீதியில் கடந்த 4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்றுக் காலை 6 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற 31 வாகன விபத்­து­களில் இந்த உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதே­வேளை, கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்­றுக்­காலை 6 மணி­யுடன் நிறை­வ­டைந்த காலப்­ப­கு­தி­யினுள், மது­போ­தையில் வாகனம் செலுத்­திய 1536 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்ள அதே­வேளை, வீதி விதி­களை மீறி­யமை தொடர்பில் 42,114 பேருக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.

அத்­துடன், பண்­டிகை காலப்­ப­கு­தியில் அவ­தா­ன­மாக வாகனம் செலுத்­து­மாறு தொடர்ந்து அறி­வு­றுத்­தப்­பட்­டு­வந்த போதிலும் இவ்­வா­றான விபத்­துகள் இடம்­பெற்­றுள்­ளமை மிகவும் வருந்­தத்­தக்­கது எனவும், இவை அனைத்தும் தவிர்க்­கப்­பட்­டி­ருக்க முடி­யு­மான விபத்­துக்கள் என விசா­ர­ணை­களில் தெளி­வா­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

அதே­வேளை, எதிர்­வரும் வார இறுதி விடு­மு­றையை முன்­னிட்டு வீதி­களில் அதி­க­ளவில் வாக­னங்கள் பய­ணிப்­பதால், வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Previous Post

போர்த்துகல் பஸ் விபத்தில் 28 பேர் பலி

Next Post

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ஓட்டளிப்பு

Next Post

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ஓட்டளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures