கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த 24 மணித்தியாலங்களில், போதையில் வாகனத்தைச் செலுத்தி 520 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் போக்குவரத்து வாகனப்பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

