தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னைய காலங்களில் சிறையில் உள்ளவர்களைப் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்களே அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

