கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை கட்டிடத்தின் 9 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மனித வள முகாமைப் பிரிவின் உதவி முகாமையாளராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 35 வயதுடைய கருண்யா சிங்காரவேல் எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 11 ஆம் திகதி 8.30 மணிக்கு சேவைக்கு வருகை தந்த இந்தப் பெண், சிறிது நேரத்தில் 9 ஆவது மாடியிலுள்ள யன்னல் ஒன்றின் மூலம் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண் பேராதெனிய பல்கலைக்கழக பட்டதாரி எனவும் கூறப்படுகின்றது.

