அரசாங்க அச்சக திணைக்களம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக தற்போது பதவி வகிக்கின்றார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களத்தைக் கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த அரசாங்க அச்சக திணைக்களம், தற்பொழுது காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக அரச அச்சகத் திணைக்களம் ஊடகத்துறை அமைச்சின் கீழிருந்தது.
இதன்போது, ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக்க பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

