Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படும் நுண்ணுயிர் எரிபொருள்: விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

July 5, 2016
in News, Tech
0
வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படும் நுண்ணுயிர் எரிபொருள்: விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படும் நுண்ணுயிர் எரிபொருள்: விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

முதன் முறையாக விஞ்ஞானிகள் மின்சாரத்தை உருவாக்கும், வெளிச்சக்தி ஏதுமின்றி செயற்படக்கூடிய நுண்ணுயிர் எரிபொருள் கலம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் இனிவரும் காலங்களில் பக்டீரியாக்களை கொண்டு தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது.

நுண்ணுயிர் எரிபொருள் கலமானது பக்டீரியாக்களின் செயற்பாட்டை பயன்படுத்தி உணவிலுள்ள இரசாயன சக்தியை உடைத்து இலத்திரன்களை வெளியேற்றுகின்றது.

இவ் வெளியேற்றப்பட்ட இலத்திரன்கள் பின்னர் மின் சக்தியாக மாற்றப்படுகிறது.

ஆனாலும் தொடர்ச்சியாக உணவு வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு, அதற்கான உணவு செலுத்தப்பட வேண்டியுள்ளது.

உணவு வழங்கல் நிறுத்தப்படும் போது இலத்திரன்கள் பிறப்பிக்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது.

இதற்கென இதுவரை காலமும் வெளிவாரியாக சக்தியை பிரயோகிக்க வேண்டிய தேவை இருந்து வந்தது.

தற்போது Iowa State பல்கலைக்கழக குழுவொன்று 3D paper fuel cell ஒன்றை உருவாக்கியுள்ளது.

இங்கு தானாகவே உணவு வழங்கல் நடைபெறுகிறது. இங்கு potassium ferricyanide எனும் இரசாயனம் உணவாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வெளிவாரியான சக்தியின்றி தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மின்சாரத்தை பிறப்பிக்க முடிந்ததாக தெரியவருகிறது.

இவ் நுண்ணுயிர்கலத்தின் தொழிற்பாடு சாதாரண பற்றரியின் தொழிற்பாட்டை ஒத்தது.

இங்கு மின்பகு பொருளாக Shewanella Oneidensis MR-1 எனும் பக்ரீரியாவும், potassium ferricyanide உம் தொழிற்படுகிறது.

இது தொடர்பான விபரங்கள் TECHNOLOGY தொடர்பான ஆய்வுப் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பக்கவாதத்து சிறந்த நிவாரணம் தரும் சீட்டாட்டம்!

Next Post

சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு!

Next Post
சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு!

சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures