Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு இணையம்

January 25, 2019
in News, Politics, World
0

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத் தளத்தினை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் பணிகள் விண்ணப்ப படிவங்கள் ஊடாக கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் பதிவு செய்யப்பட்டு வந்தன.

எனினும் தூர இடங்களில் இருந்து வரும் போது அதற்கான கால, நேர, பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்ப படிவங்களை தவிர்த்து, வேலையற்ற பட்டதாரிகள் இணையம் மூலமாக, இலகுவாகவும், துரிதமாகவும் இந்த பதிவினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Previous Post

168 பறவைகளுடன் ஒருவர் கைது

Next Post

காதலியின் கர்ப்பத்தை அழிக்க காதலன் செய்த கொடூரம்: யாழில் சம்பவம்

Next Post

காதலியின் கர்ப்பத்தை அழிக்க காதலன் செய்த கொடூரம்: யாழில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures