Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க்கட்சி தலைவர் தன் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்

January 23, 2019
in News, Politics, World
0

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.

நேற்று முற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்தில் மூன்றாவது மாடியிலமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் அதனை எதிர்க்கட்சி தலைவரின் செயலாளரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறிது காலமே எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருக்கப் போவதாகவும் விரைவில் இந்த அறையில் இருந்து வெளியேறி அடுத்த நிலைக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். ஐ.ம.சு.மு எம்.பிக்களுடன் சுவாரஸ்யமாக உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடந்த கால எதிர்க்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு சுட்டிக்காட்டிய எம்.பிகள் ”உங்களின் படம் இங்கே ஒரு இடத்தில்தான் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் படம் 4 இடங்களில் இருக்கின்றது.

அவரின் படம் 5ஆவது தடவையாகவும் இங்கு மாட்டப்பட வேண்டுமென பிரார்த்திப்பதாக குறிப்பிட்டனர். ஜானக வக்கும்புர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இவ்வாறு கூறினர்.

பணிகளை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுடனும் எம்.பிக்களுடனும் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து சென்றார்.

Previous Post

படைப்புளுக்களுக்கு தீர்வாக பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Next Post

மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா தொடர்ந்தும் இழுபறியில்

Next Post

மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா தொடர்ந்தும் இழுபறியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures