வாழ்க்கைத்துணையை வரவழைப்பதில் உள்ள கால தாமதத்தைக் குறைக்க திட்டம்!

வாழ்க்கைத்துணையை வரவழைப்பதில் உள்ள கால தாமதத்தைக் குறைக்க திட்டம்!

வெளி நாடுகளில் பிறந்த தமது வாழ்க்கைத்துணையை கனடாவிற்கு வரவழைக்க, கனேடியர்கள் எதிர்நோக்கும் நீண்ட கால தாமதத்தைக் குறைக்க கனேடிய அரசு முன்வந்துள்ளது.

விண்ணப்பங்களைப் பரிசீலிக்க எடுக்கும் நீண்ட கால அவகாசம் தொடர்பாகவும், விரக்தியளிக்கும் பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் தொடர்பாகவும் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்கும் முகமாகவே குறித்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனேடிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரியும், அழைக்கப்படுபவர்களும் ஏற்கனவே கனடாவில் வசிப்பவர்களாகவும், அவர்களது விண்ணப்பங்களில் சிக்கல்கள் எதுவும் இல்லாமல், அவ்விண்ணப்பங்கள் ஜூன் 13 இற்கு முன்னதாகக் கிடைக்கப் பெற்றும் இருக்கும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பங்களிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கனேடிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடாவிற்குள் அனுமதிக்கப்படுகின்ற, கனேடியர்களைத் திருமணம் செய்யும் வெளிநாடுகளில் பிறந்த வாழ்க்கைத்துணையினரால் அண்மைகாலமாக கனடாவில் இடம்பெறும் பாரிய விவாகரத்தும் இதன்போது குறைவடையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *