Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியை அரசியல் அனாதை ஆக்கிய மகிந்த : நடுத்தெருவில் நிற்கும் மைத்திரி

November 13, 2018
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு கட்சி இல்லை. இன்று அவரை அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளார். இன்று ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுக்கு தனக்கென கூறிக் கொள்ள கட்சி ஆதரவாளர்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக நீரோட்டத்தில் நிலைத்து நின்றிருந்தால், 2020 வரையில் அவருக்கு ஜனாதிபதியாக இருந்திருக்க முடிந்திருக்கும். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டதனால், ஜனாதிபதியின் அந்த ஆட்சிக் காலம் முடியும் வரையில் இருப்பதற்கு மஹிந்த இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு இடமளித்தால் அவர்கள் ராஜாபக்ஷாக்களே இல்லையெனவும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

Next Post

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த கவலை

Next Post
புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த கவலை

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures