கண்டி – கலஹா பகுதியில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி – கலஹா பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலையின் சொத்துக்கள் மீது சேதம் விளைவித்த சம்பவம் கடந்த வாரம் பதிவாகியிருந்தது.
இவ்வாறு அமைதியின்மையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த 7 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

