Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

EpiPen ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள் கனடாவுக்கு இறக்குமதி

September 1, 2018
in News, Politics, World
0
EpiPen ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள் கனடாவுக்கு இறக்குமதி

அமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உயிராபத்தான ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள், தற்போது கனடாவில் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஜினெட் பெற்றிபாஸ் தெரிவித்துள்ளார்.

EpiPen எனப்படும் ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள், அமெரிக்க அங்கீகாரம் பெற்ற Auvi-Q Kaleo மருந்து நிறுவனமிடமிருந்து, கனடாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான ஒரு இடைக்கால ஒழுங்கில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாக கனடாவில் EpiPen மற்றும் EpiPen Jr. தானாக செலுத்தும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே அளவு பொதியிடப்பட்ட இந்த இரு தடுப்பூசிகளையும் கனடாவிற்கு கொண்டு வர கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும் EpiPen போலல்லாது Auvi-Q ஒரு உள்ளிழுக்கும் ஊசி மற்றும் ஒரு மின்னணு குரல் வழிமுறை அமைப்பையும் கொண்டது. Auvi-Q 0.3 தடுப்பூசிகள், எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து மருந்தகங்களில் பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், Auvi-Q பிரெஞ்ச் பெயர்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கொண்டிராது என கனடா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

சுரங்கபாதை அமைப்பு குறித்து ரொறொன்ரோ மேயர் கருத்து!

Next Post

ரொறொன்ரோவில் இருந்து வெளியேறும் மக்கள்

Next Post

ரொறொன்ரோவில் இருந்து வெளியேறும் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures