Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க்கட்­சிப் பத­வி­யால்- நாடா­ளு­மன்­றில் சர்ச்சை!!

August 8, 2018
in News, Politics, World
0

எதிர்க்­கட்­சித் தலை­மைப் பத­வி­யால் நேற்று நாடா­ளு­மன்­றில் கடும் சர்ச்சை ஏற்­பட்­டது. கூடிய ஆச­னங்­க­ளைக் கொண்ட குழு என்ற அடிப்­ப­டை­யில் தமக்கே எதிர்க்­கட்­சிப் பதவி தரப்­பட வேண்­டும் என்று கூட்டு எதி­ர­ணி­யி­னர் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்த விட­யத்­தைக் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய பின்­னர், சட்ட ஆலோ­ச­னை­க­ளைப் பெற்று முடிவை இந்த வாரத்­தில் அறிப்­பேன் என்று சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றில் நேற்று வாய்­மூல விடைக்­கான வினா நேரம் முடிந்த பின்­னர் ஒழுங்­குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய கூட்டு எதி­ர­ணி­யின் குழுத் தலை­வர் தினேஸ் குண­வர்த்த வைத்த கருத்தை அடுத்து சபை­யில் சர்ச்சை ஆரம்­மா­னது.நாடா­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யில் எமக்கே அதி­க­ள­வி­லான ஆச­னங்­கள் உள்­ளன. தற்­போது எமது குழு­வில் 70 பேர் உள்­ள­னர். எனவே எதிர்க்­கட்சி தலை­வர் பதவி எமக்கே பெற்­றுத் தரப்­பட வேண்­டும் என நாம் கோரி­னோம். எழுத்து மூல­மும் சபா­நா­ய­ருக்கு அறி­வித்­தோம். இன்று (நேற்று ) தீர்­மா­னத்தை வழங்­கு­வ­தாக கூறி­யி­ருந்­தீர்­கள்.புதிய தீர்­மா­ன­மொன்றை வழங்­கு­வ­தா­கவே கூறி­னீர்­கள். எங்கே அந்­தத் தீர்­மா­னம்?.

எமக்கு எதிர்க்­கட்சி பதவி தர­வேண்­டும். சம்­பந்­த­னு­டன் எமக்கு தனிப்­பட்ட பிரச்­சினை இல்லை. அமிர்­த­லிங்­கம் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த போதும் அவ­ருக்கு கீழ் நாம் செயற்­பட்­டுள்­ளோம். சம்­பந்­தன் எமக்கு பிரச்­சி­னை­யில்லை.

ஆனால் நாடா­ளு­மன்­றத்­தில் ஜன­நா­யக உரிமை பாது­காக்­கப்­பட வேண்­டும். சம்­பி­ர­தா­யத்தை மீறி செயற்­பட கூடாது. நாடா­ளு­மன்­றத்­தின் ஜன­நா­ய­கம் தற்­போது செல்லா காசாக மாறி­விட்­டது. ஆகவே எதிர்க்­கட்சி தலை­வர் பத­வியை எமக்கு பெற்று தர வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­வர்த்­தன தெரி­வித்­தார்.
அப்­போது சபை முதல்­வ­ரும், அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல எழுந்து கருத்­துத் தெரி­வித்­தார்.

கூட்டு எதி­ரணி என்­பது ஒரு கட்­சி­யல்ல. அது ஒரு கும்­பல் என்று அவர் கிண்­ட­ல­டித்­தார். அப்­போது பக்­கத்­தில் அமர்ந்­தி­ருந்த அமைச்­சர் ஜோன் அம­ர­துங்க, அது கட்­சி­யல்ல, ஆவா கும்­பல் என்­றார்.

கிரி­யெல்­ல­வின் கருத்­தால் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னர் சீற்­ற­ம­டைந்­த­னர். அமைச்­ச­ருக்கு எதி­ரா­கக் கோச­மிட்­ட­னர். அதன்­பின்­னர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டலஸ் அழ­கப்­பெ­ரும எழுந்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் விவ­கா­ரத்­தில் ஆளும் கட்சி ஊட­கங்­கள் இரா.சம்­பந்­த­னை­யும், தினேஸ் குண­வர்த்­த­ன­வை­யும் சம்­பந்­தப்­ப­டு­கின்­றன. தமிழ் ஊட­கங்­கள் இரா.சம்­பந்னை முதன்­மைப்­ப­டுத்தி கருத்து வெளி­யி­டு­கின்­றன. எமக்கு அவ்­வா­றான நோக்­க­மில்லை. ஆசன மட்­டத்­தில் எமக்கே அதிக ஆச­னங்­கள் இருக்­கின்­றன. ஒப்­பீட்டு அடிப்­ப­டை­யில் எமக்கே எதிர்க்­கட்­சிப் பதவி வழங்­கப்­பட வேண்­டும் என்­றார் அவர்.

தற்­போது எதிர்க்­கட்­சி­யில் 7 வீதத்தை கொண்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யும் 2.8 வீதத்தை கொண்ட கட்­சிக்கு எதிர்க்­கட்சி பிர­தம கொறடா பத­வி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் 31 வீதத்தை கொண்ட எமக்கு ஒழுங்­காக நேரம் கூட ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தில்லை.

நாடா­ளு­மன்­றத்­தின் பழைய கட்­சி­க­ளான சம­ச­மாஜ கட்சி உட்­பட பொது­ஜன ஐக்­கிய முன்­னணி போன்ற கட்­சி­களை பிர­தி­நி­தித்­துப்­ப­டுத்­து­வர்­களே இந்த கோரி­க­கை­களை முன்­வைக்­கின்­ற­னர். ஆகவே இது குறித்து அவ­தா­னம் செலுத்த வேண்­டும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

உடனே எழுந்த சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல, சரி ஏனை­ய­வர்­களை விட்டு விடுங்­கள். நீங்­கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்து கட்சி என்ன? கூறுங்­கள், உங்­க­ளின் கட்சி என்ன ? என்று கேட்ட போது டலஸ் அழ­க­பெ­ரும உட்­பட ஏனை­யோர் திக்கு முக்­காடி பதி­ல­ளிக்க முடி­யா­மல் திண்­டா­டி­னர். கிரி­யெல்­ல­வுக்கு எப்­போ­தும் குழப்­பு­வதே வேலை­யா­கும் என்­றார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டலஸ் அழ­கப்­பெ­ரும

100 நாள் ஆட்­சி­யின் போது சுதந்­தி­ரக் கட்­சி­யின் பலர் ஆளும் கட்­சி­யில் இருந்த போதும் எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிமல் சிறி­பால டி சில்­வாவே செயற்­பட்­டார். ஆகவே நிமல் சிறி­பால டி சில்­வா­வுக்கு எதிர்­கட்சி தலை­வர் பதவி வழங்­கி­யதை போன்று தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு எதிர்க்­கட்சி தலை­வர் பதவி வழங்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வாசு­தேவ நாணக்­கார, விமல் வீர­வன்ச ஆகி­யோர் வலி­யு­றுத்­தி­னர்.

எதிர்க்­கட்சி தலை­வர் பத­வியை எமக்கு நீங்­கள் பெற்று தர­மாட்­டீர்­கள். உங்­க­ளுக்கு உயர்­மட்­டத்­தில் இருந்து அழுத்­தம் வரு­வ­தனை நாம் அறி­வோம். ஆகவே இந்த சந்­தர்­பத்­தில்­தான் முது­கெ­லும்­பு­டன் செயற்­பட வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோஹித அபே­கு­ண­வர்­தன குறிப்­பிட்­டார்.

எதிர்க்­கட்சி தலை­வ­ரான இரா.சம்­பந்­தன் , தெற்கு பிரச்­சினை மாத்­தி­ர­மின்றி வடக்கு மக்­க­ளின் பிரச்­சினை பற்றி கூட நடா­ளு­மன்­றத்­தில் பேசு­வது கிடை­யாது. அவர் ஒரு சில­ரின் அழுத்­தங்­க­ளின் பிர­கா­ரமே அந்த கதி­ரை­யில் உள்­ளார். ஆகவே அவரை பத­வி­யில் இருந்த நீக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருந்­திக்க பெர்­ணான்டோ கூறி­னார்.

எனக்கு எந்­த­வொரு அழுத்­த­மும் என்­மீது பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. நான் அழுத்­தங்­க­ளுக்கு அடிப்­ப­ணிய மாட்­டேன். இது தொடர்­பில் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­தன் பின்­னர் சட்ட ஆலோ­ச­னை­களை பெற்று இந்த வார­ம­ள­வில் அறி­விப்­பேன் என சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­தார் என்று சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­தார்.

Previous Post

மக்­கள் பல­மி­ருந்தால் -ஆட்­சி­ய­மை­யுங்­கள்

Next Post

நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

Next Post
நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அலு­வ­லர்­களை மாற்­றுமாறு – முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures