Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

April 25, 2016
in News
0

eeeநீண்ட கால இடைவெளியின் பின்னர் அமைதியாக இருந்து கேட்டு ரசித்த காதிற்கு இனிமை சேர்த்த சங்கீத கான ராகங்கள். இசையின் ஆதாரமாக விளங்கும் ராகங்களின் உயிர் துடிப்புக்களை கதைகளின் நினைவுச் சிற்ப்பங்களாக நவீன கலையான சங்கீத கலை புதிய விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய சூழ் நிலையில் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பரமேஸ்வரன் அவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்களின் செயற்பாடுகளில் இருந்து வேறுபட்டு தனித்துவமான பாணியில் அதாவது கர்நாடக சங்கீதம், கவின் கலை நிகழ்வுகள், உள்ளூர்கலைனர்களை ஊக்குவித்தல் என பல்வேறுபட்ட நல்ல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செயதுவருவதனை நாம் அறிவோம். அந்தவகையில் விழாவின் வெற்றிக்கு பெருமை சேர்க்கும் முகமாக சங்கீத இசை மகன் என பலராலும் போற்றப்படும் மகதி அவர்கள் கலந்துகொண்டு சங்கீத ராகங்கள் கலந்த கீர்த்தனைகள் உள்ளடங்கலாக திரை இசைப்பாடல்களையும் அசத்தலாக பாடி சங்கீத ரசிகர்கள் உள்ளத்தில் இன்ப வெள்ளத்தினை ஊற்றெடுக்க வைத்தார்கள். விழாவின் கதாநாயகர் பரமேஸ்வரன் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளாக ஸ்ரீ வரசித்தி ஆலயத்தின் பிரதம குருக்கள் பஞ்சாட்சர விஜயகுமாரன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனத்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான செய்தி ஊடகங்கள் கலந்துகொண்டு விழாவின் பதிவுகளை உள்வாங்கியதனை பார்க்க கூடியதாக இருந்தது. பி எச் அப்துல்கமீத் அவர்கள் அதி சிறப்பு பிரதி நிதியாக ல்கலந்துகொண்டு நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழி சமைத்தார்கள். பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா, குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்ற பாடலினை பாடிய பொது சங்கீத ரசிகர்களின் கரகோஷம் மண்டபத்தினை அதிர வைத்தது. ராகங்களின் நுண்ணலகுகளின் ஒலித் துடிப்புக்களில் உணர்வுகளுக்கு முன்னுரிமை தந்து எழுச்சி தருகின்ற பாடல்களால் ரசிகர்களின் நெஞ்சங்களை ஊட்ருவிச் செல்கின்ற பாடல்களால் நம்மை மகழ்வித்த இசைமேதை மகதி என்று கூறுவதில் தப்பொன்றும் இல்லை. அவ்வாறாக அசத்தலாக ஓர் ஷங்கரின் முழுநீள திரைப்படத்தினை பார்த்த சந்தோசத்தினை இன்றைய இசை நிகழ்ச்சி வழங்கியது என்றால் அது மிகையாகாது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இனிமையான குரலில் இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களின் இசையில் உருவாகிய காற்றினிலே வரும் கீதம், கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம், கல்லும் கனியும் கீதம், காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலினை பாடியபோது ரசிகர்கள் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்தபடி கைகளினால் தாளம்போட்டு ரசித்தனை அவதானித்தேன். ஈழநாடு பரமேஸ்வரன் அவர்களின் பத்திரிகை துறை சார்ந்த பணியினை இங்கு எழுதுவதாயின் சாத்தியமில்லை. அவ்வாறாக நான் பல கட்டுரைகளை அவர்களின் பத்திரிகைக்காக எழுதியுள்ளேன். எழுதியும் வருகின்றேன். மிகவும் சிறப்பான கட்டுரைகள் தாங்கி வருகின்ற ஓர் தனித்துவமான பத்திரிகை என கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். ஈழநாடு அதிபர் அவர்கள் சமூகம் சார்ந்த பல்வேறுவிதமான முயற்சிகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி அவர்களின் முயற்சிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு தங்களால் ஆனா உதவிகளை செஇதுவருவ்தனை நாம் மறக்க முடியாது. குறிப்பாக இந்து ஆலைகளின் வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கு ஓர் முக்கய பங்குண்டு. இன்றைய விழாவில் யாழ் வண்ணை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலின் உள்கட்டமைப்பு புனருத்தாரனத்திட்காக தொண்டர்கள் நிதிசேகரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதனை அவதானித்தேன். அவர்களுடன் ஓர் நேர்காணலை மேற்கொண்டிருந்த வேளை ஈழநாடு பத்திரிகை பிரதம ஆசிரியர் அவர்களின் தார்மீக உதவிக்கு தாங்கள் என்றும் கடமைப்பட்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக எவ்வித கட்டணமும் இன்றி ஆறு மாதங்களுக்கு தங்களது நிதி சேகரிப்பு சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பதிவுகளை தாங்கள் பத்திரிகையில் இணைத்துக் கொள்வதாகவும் கூறினார்கள். விழாவின் இறுதியில் மகதி அவர்களின் பாடுகின்ற திறமைகள் பற்றி நான் கூறவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மகதி பற்றி கூறுவதாயின் ஆலாபனைகளிலும் ஸ்வரங்களிலும் இவர் வெளிப்படுத்தும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் இவருக்கே உரித்தான பாணி, ஒவ்வொரு கச்சேரியையும் சரியான திட்டமிடலுடன் அணுகும் இவரது கச்சேரிப் பாங்கு, அபாரமான நினைவாற்றல், கச்சேரிகளில் பாடும் ஒவ்வொரு கீர்த்தனைகளுடன் கூடிய வரிகள் இவருக்கு மனப்பாடம். ஆலாபனைகளில் இவர் கையாளும் பாணி தனித்துவமானது. சிறப்பான கலைநிகழ்ச்சிகளை ஒழங்கு செய்து தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றினை தங்கு தடையின்றி பிரதான குறிக்கோளாக கொண்டு இயங்கிவரும் பிரதம அதிபர் பரமேஸ்வரனின் பத்திரிக்கை துறை சார்ந்த சமூகப்பணி பலவழிகளிலும் பரிணாம வளர்ச்சியடைய வாழ்த்துகின்றோம்.
Langes, FCPA, FCGA
EasyNews Latestnews
easy24news.com

Previous Post

கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 25ஆவது வருடாந்த விருது அளிக்கும் நிகழ்வுடன் ஆட்டம், பாட்டு, கொண்ட்டாட்டம், இனிய உணவு என எல்லாம் கலந்த ஒரு கலவையாக நிகழ்சிகளை வழங்கி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் குதுகலிக்க வைத்தனர்.

Next Post

கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தாவும் பிரதான குருக்களுமாகிய பெரு மதிற்புக்குரிய சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களுக்கு அதி உயர் விருதான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Next Post

கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தாவும் பிரதான குருக்களுமாகிய பெரு மதிற்புக்குரிய சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களுக்கு அதி உயர் விருதான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures