ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் 16 உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அரசாங்கத்திற்கு எதிரானவர்களுடன் இருந்து கொண்டு பயணிக்க முடியாது என ஐ.தே.க. தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

