Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்!

April 5, 2018
in News, Politics, World
0
விண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்!

பூமியில் மட்டுமன்றி விண்வெளியிலும் சென்று ஆட்சி செய்கிறான் மனிதன். மூளையைக் கசக்கி, இந்தப் பூவுலகில் வாழ்வை எளிதாக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்து வெற்றி காண்கிறான். இப்படி பூமியில் உள்ள வாழ்க்கையைத் தொழில்நுட்பத்தின் மூலம் ஆண்ட மனிதன், விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து பூமியையே தொழில்நுட்பத்தால் ஆளுகின்றான்.

2015 ம் ஆண்டிலிருந்து, ISS எனப்படும் International Space Stationல் வாழும் மனிதனுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய Plant Pillow எனப்படும் மெல்லிய பைகளில், சில வகையான செடியின் விதைகளைச் செயற்கையாக ஊசிகளின் வழியாகத் தண்ணீர் மற்றும் காற்று செலுத்தி வளர்த்துவந்தனர். அங்கு வாழும் விஞ்ஞானிகள் Vegetable Producing System என்னும் முறையின் மூலமாகக் கீரை, தக்காளி போன்ற காய் கனிகளை வளர்த்து வந்தனர். இதன் மூலம் சத்தான உணவைப் பெறுவது மட்டுமன்றி விண்வெளியில் செடிகளின் செயலாற்றலால், புவியீர்ப்பிற்கு அவை பழகுதல் போன்ற விவரங்களை அறிந்து கொள்கின்றனர். மேலும் இதன் அடிப்படையில் பூமியில் உள்ளதைப் போலவே செடிகளை விண்வெளியிலும் வளர்ப்பதற்கான வழிகளையும் அறிந்து கொள்கின்றனர்.

தற்போது இந்த ஆய்வில் நாசாவின் விஞ்ஞானிகள் கையாளும் புதிய முயற்சிக்காக டப்பர்வேர் (Tupperware) நிறுவனத்துடன் கைகோத்துள்ளனர். 2017 ம் ஆண்டு, PONDS என்று சுருக்கமாகக் கூறப்படும் Passive Orbital Nutrient Delivery Systemமின் முந்தைய வடிவத்தை வரைந்த நாசாவின் ஆராய்ச்சி விஞ்ஞானி Howard Levine, Techshot என்னும் நிறுவனத்திடம் தன் வடிவத்தை மேலும் மெருகேற்ற அனுப்பினார். அந்த நிறுவனமும் ஹோவர்டின் திட்டத்தைச் செயல்படுத்த அதை டப்பர்வேர் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இரு நிறுவனங்களும் சேர்ந்து ISS விஞ்ஞானிகளின் வேலையைக் குறைக்க, Semi- Hydroponic System என்னும் மண்ணிலா வேளாண்மை முறையைப் பின்பற்றி PONDSல், அவ்வப்போது தண்ணீர் நிரப்பப்படும் மெல்லிய பைகளுக்கு பதிலாக செடிகளின் விதைகளுக்கும் வேர்களுக்கும் தேவையான தண்ணீரை நிரந்தரமாக வழங்கும் நீர்த்தேக்க முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நீர்த்தேக்க முறையில் ஒவ்வொரு தண்ணீர் உருளைக்கும் தனித்தனியாக தண்ணீர் பங்கிடப்படுகிறது. இதனால் வேறொருவரின் துணையின்றி விதைகளும் வேர்களும் தண்ணீரை உறிஞ்சி, செடிகளாக வளர்கின்றன.இவற்றுள் நான்கு மாட்யூல் கருவிகள் இருக்கும். Open Source Seed Initiative நெறியின் மூலம் Romaine lettuce என்னும் கீரைகளை வளர்க்கும் Black Opaque Moduலெ, உள்ளே நடப்பதை வெளிக்காட்டும் கதவுகள் உடைய இரண்டு மாட்யூல், மற்றும் நீர் வேளாண்மையின் மூலமாக கீரையின் வேர்களில் தண்ணீரின் செயலையும் புவியீர்ப்பின் செயலையும் தெளிவாகக் கண்காணித்து வீடியோ பதிவு செய்ய ஏதுவான கண்ணாடி உரையுடைய ஒரு மாட்யூல் போன்றவை இருக்கும்.

இதனை வெளியிட்ட நாசாவின் ப்ளோரிடாவில் உள்ள Kennedy Space centreன் Veggie Project தலைவர் நிக்கோல் ( Nicole Deto) கூறுகையில் ” PONDS திட்டத்தின் மூலமாகக் தண்ணீரின் பங்கீடு, ஆக்சிஜன் இருப்புத்தன்மை, வேர்களின் வளர்ச்சிக்கான வழி போன்றவற்றில் புவியீர்ப்பின் சிறு சிறு விளைவுகளைக் குறைக்கிறது” என்றார்.

மனிதனின் விஞ்ஞானம் கோள் வீதி வரை பாய்ந்தாலும், மனிதனால் உருவான தொழில்நுட்பத்தின் விளைவுகளும் கோள் வீதி வரை எழுதலாம். இதன் காரணமாகத்தான் பிற்காலத்தில் நம் மண்ணில் விவசாயம் அழிந்து போகும் நிலையில், விண்வெளியில் அதை மண்ணிலா விவசாயமாக விதைக்கும் முறையைத் தொடங்கியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று உணவுப் பொருள்களை வாங்க சீக்கிரமாக அனைவரும் ராக்கெட் வாங்க வேண்டும். அதற்கும் டெஸ்லா தயாராகிக் கொண்டிருக்கிறது.

Previous Post

மகிழுந்தில் சென்றுகொண்டிருந்த நபர் அடித்துக்கொலை!!

Next Post

நேசன் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்து மேஜர் ஜெனரல் அமல் கைது

Next Post

நேசன் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்து மேஜர் ஜெனரல் அமல் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures