நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தும் முகமாக நள்ளிரவு ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைத்து இருளுக்குள் மூழ்கியது.
Aude இன் இரு நகரங்களான Carcassonne மற்றும் Trèbes ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டும், 16 பேர் காயமடைந்துமிருந்தனர். அதைத் தொடர்ந்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், காயமடைந்தவர்களுக்கு ஆதரவாகவும், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்கியது.