முறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபா நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்தது தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.