Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள்

February 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

நாம் கூட்­டாட்­சியை (சமஷ்டி) கைவிட்­டோம் என்று கூறி­வ­ரு­கின்ற அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் 27 வட்­டா­ரங்­க­ளில் எந்­த­வொரு வட்­டா­ரத்­தி­லும் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யா­த­வர்­தான் இன்று தூய கரத்­தைப் பற்­றிப் பேசு­கின்­றார். தூய­க­ரத்­தின் மாந­கர முதல்­வர் வேட்­பா­ளர்­தான், நிதி அமைச்­சரா ரவி கரு­ணா­நா­யக்க இருந்­த­போது வாக­னத்­துக்கு வரிச் சலுகை பெற்­ற­வர்.

இலங்­கை­யின் தேசி­யக்­கொடி உரு­வாக்­கத்­துக்­காக நிய­மிக்­கப்­பட்ட 7 பேர் கொண்ட குழு­வில் இரு தமி­ழர்­க­ளும் 5 சிங்­கள உறுப்­பி­னர்­க­ளும் இடம்­பெற்­றி­ருந்­தார். இந்­தக்­கு­ழு­தான் இப்­பொ­ழுது பயன்­பாட்­டி­லுள்ள சிங்­கக் கொடி­யைத் தேர்வு செய்­தது. இந்த நட­வ­டிக்­கை­யின் போது ஒரு தமி­ழர் வெளி­யி­யேற்­றி­ருந்­தார்.

அவர் வெளி­யே­றிய பின்­னர் மற்­றொரு தமி­ழன் அந்­தக் குழு­வில் இருந்து ஒப்­ப­மிட்­டான். சிங்­கக் கொடியை ஏற்­றுக் கொண்டு ஒப்­ப­மிட்­டது வேறு யாரு­மல்ல. அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் ஜி.ஜி.பொன்­னம்­ப­லம்­ தான்.

மக்­க­ளின் ஆணைக்கு இணங்க நாம் சரி­யான பாதை­யி­லேயே பய­ணித்து வரு­கின்­றோம். தேர்­த­லின் போது வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­தில் கால தாம­தம் ஏற்­ப­டு­வ­தால் மக்­க­ளுக்கு ஏமாற்­றம் உள்­ளமை உண்­மை­தான். அது எமக்­கும் விளங்­கு­கின்­றது. மூன்று ஆண்­டா­கி­யும் எது­வும் நடக்­க­வில்லை என்ற ஏக்­கம் மக்­க­ளுக்கு இருக்­கின்­றது.

அதனை நாம் அறி­வோம். அத­னால்­தான் அர­சுக்கு பல வழி­க­ளி­லும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஊடாக அழுத்­தங்­களை கொடுத்து வரு­கின்­றோம். நாம் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளில் சில­வற்றை நிறை­வேற்ற கால­தா­ம­தம் ஆகின்­றதே தவிர நாம் ஒன்­றுமே செய்­ய­வில்லை என்று இங்­குள்­ள­வர்­கள் கூறு­வது பொய்­யா­னது.

தேர்­தல்­க­ளில் தமிழ் மக்­க­ளுக்கு சரி­யாக வாக்­க­ளிக்­கத் தெரி­யும். அதனை அவர்­கள் கடந்த காலங்­க­ளில் நிரூ­பித்­தும் இருக்­கின்­றார்­கள். நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற இம்­மு­றை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கே மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்.

இங்கு உதி­ரிக் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வெற்றி வாய்ப்­பைக் குறைத்­தால், கூட்­ட­மைப்பு மீது மக்­கள் நம்­பிக்கை குறை­கின்­றது என்றே வெளி­நா­டு­கள் எண்­ணும். எனவே கூட்­ட­மைப்பை மக்­கள் அமோக வெற்­றி­ய­டை­யச் செய்­ய­வேண்­டும் – என்­றார்.

Previous Post

82 ரூபாயில் இத்தாலியில் வீடு !

Next Post

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

Next Post

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures