Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்ளுராட்சித் தோ்தல் : இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு

January 29, 2018
in News, Politics, World
0
உள்ளுராட்சித் தோ்தல் : இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு

இந்த உள்ளுராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது. கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சித் தோ்தல்களை விட இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு. இதற்கு காரணம் வட்டார முறைத் தேர்தலாகும். இம்முறை வேட்பாளா்களது, விளம்பரங்கள் கட் அவுட் ,போஸ்டா்கள் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் சூழல் மாசடைதல் செலவீனம் குறைவாகவே காணப்படுகின்றது. வேட்பாளர்கள் தத்தமது வட்டாரத்திற்குள்ளே அவா்கள் தோ்தல் பிரச்சாரங்களை அமைதியாக நடாத்துகின்றனா். எமது அமைப்பின் 25 மாவட்ட இணைப்பாளா்கள் ஊடாக இதுவரையிலும் 336 தோ்தல் வன்முறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேற்கண்டவாறு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவா் காலாநிதி பாக்கியயோதி சரவனமுத்து இன்று(28) மருதானையில் நடைபெற்ற ஊடக மாநட்டின்போதே
இத் தகவல்களைத் தெரிவித்தாா்.

அவா் தொடா்ந்து தகவல் தருகையில் 13,000 வாக்களிப்பு நிலையங்களையும் 341 உள்ளுர் அதிகார சபைகளைப் பிரநிதித்துவப்படுத்துவதற்காக போட்டியிடுகின்றர். 56000 வேட்பாளா்களையும் கொண்டு நடாத்தப்படுகின்ற இத் தோ்தலுக்கான தோ்தல்கள் ஆணைக்குழுவின் மொத்த செலவு சுமாா் 3500 மில்லியன் ஆகும். இத் தோ்தலில் இம்முறை 8356 உள்ளுரா் அதிகார சபைகளின் பிரநிதிகளையும் வட்டார முறை மற்றும் கலப்பு முறைத் தோ்தலாகும்.

இம்முறை தோ்தலில் 25 வீத பெண்களுக்கு உள்ளுராட்சித் தோ்தலில் அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். ஆனால் சில கட்சிகளினால் பெண்களை பட்டியலிட்டுவிட்டு அவா்களது பெயா்கள் நீக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன் புத்தளத்தில் ஒரு மொளலவியினால் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம். மதரீதியாக பெண்கள் அரசியல் வரத் தடை எனக் கூறியுள்ளாா். அது சம்பந்தாமாக எமது அமைப்பு அந்த பேச்சினை பதிவு செய்து தேர்தல் ஆணையாளா், பொலிஸ் மா அதிபா் ஜனாதிபதிக்கு முறையிட்டுள்ளோம். மேலும் மாத்தளையில் பாராளுமன்ற உறுப்பிணா் தமது பிரதேசத்தில் உள்ள வயோதிபா்கள் பெண்களை இலவசமாக பிரயாணம் தங்கிநின்று மத நிகழ்வுகளுக்கு கதிா்காமத்திற்கு அழைத்துச் செல்வதனை ஆதாரபூர்வமாக தகவல் திரட்டியுள்ளோம்.

மகரகமவில் உள்ள இரு பாதைகள் 2 நாட்களுக்குள் கொங்கீறீட் இடப்பட்டு வருகின்றது. அங்கு கொங்கீறீட் இடுபவா்கள் மேல் மாகாண முதலமைச்சரின் ரீ. சேட்டை அணிந்து அந்தப் பணிகளைச் செய்கின்றனா். அப்பிரதேச மக்கள் இதனை முதலமைச்சா் தோ்தல்காலத்தில் அவசர அவசர மாக செய்து கொடுப்பது தோ்தல் வாக்குகளைப் பெறுவதற்காகவே எனத் தெரிவித்தனா்.

நீர்கொழும்பின் நகரில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவரது படத்தினையும் மொட்டு சின்னத்தினையும் விளம்படுத்தி வாக்கு கேட்கும் ஒரு ஊடக அறிவிப்பை செய்து வருகின்றாா். மற்றும் பெறிய கட்சிகள் பாதையை இடைமறித்து மக்களது போக்குவரத்துக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி பொதுக் கூட்டம் நடாத்தி வருகின்றனர். அத்துடன் அரச இலச்சனை பதித்த வாகணங்கள் அமைச்சா்களது தனிப்பட்ட செயலாளா்கள் அதற்குரிய எரிபொருள்கள் அமைச்சினால் பெறப்பட்டமை, கட்சித் தலைவா்கள் வானஊா்தி பாவிக்கின்றமை,

சில் கட்சிகளின் அமைப்பாளா்கள் பெண்களை உதாசீனம் செய்து அவா்களை பிரச்சாரப் பணிகளில் ஈடுபடாமல் தடுத்தல், அவா்களது வீடுகள் உடைத்தமை, வடக்கில் 55 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் கல்முனையில் மாநகர பிரதேசத்தில் தோ்தல் வன்முறைகள் அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அங்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏனைய கட்சிகள் சென்று கூட்டம் நடாத்த விடாமல் தடுத்தல் அவ் வழியாக வரும் வாகனங்களை இடைமறித்து சேதப்படுத்தல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எமது அமைப்பின் 24 மாவட்டங்களின் இணைப்பாளா்கள் மற்றும் பிரநிதிகள் ஊடாக உரிய தோதல் அவதாணங்களை அவாதானித்து அறிக்கையிட்டு உரிய ஆணைக்குழு கட்சிகளின் தலைவா்கள் செயலாளா்கள் ஜனாதிபதிக்கும் சமா்ப்பிக்கப்படும் எனவும் காலாநிதி பாக்கியஜோதி சரவனமுத்து தெரிவித்தாா்.

Previous Post

சிங்கள வாக்குகளுக்காக காத்தான்குடியில் கூட்டம் நடத்திய மஹிந்த

Next Post

மஹிந்த – மைத்திரி தனி ஆட்சி வந்தால், ரணிலை ஜனாதிபதியாக்குவோம்

Next Post

மஹிந்த – மைத்திரி தனி ஆட்சி வந்தால், ரணிலை ஜனாதிபதியாக்குவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures