சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் ஜியாங் நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 3 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான இறுதிகட்ட வழக்கு விசாரணை, பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. சுமார் 10,000 பேர் கூடி நின்று வேடிக்கை பார்க்க, நீதிபதிகள் வழக்கை விசாரித்து, போதைப்பொருள் கடத்திய 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு 3 பேரும் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர்.