Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு

December 8, 2017
in News, Politics
0
முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு அங்­கத்­த­வர்களிடையே இரு வேறு­பட்ட முரண்­பா­டான கருத்­துகள் இருந்தால் அவற்றை அறி­வி­யுங்கள். இரு வேறு­பட்ட அறிக்­கை­க­ளையும் சமர்ப்­பி­யுங்கள் என தலதா அத்­து­கோ­ரள வேண்டிக் கொண்டார். அவை தொடர்பில் நீதி­ய­மைச்சு ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் என நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் தனியார் சட்­ட­தி­ருத்த சிபார்சுக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­மைச்சர் சலீம் மர்­சூபை வேண்டிக் கொண்டார்.

குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­தி­களை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள நேற்று முன்­தினம் மாலை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபார்சு பணி­களின் தாமதம் அதற்­கான காரணம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.

ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் குழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் விளக்­க­ம­ளித்தார்.

சட்­டத்­தி­ருத்த சிபார்சுக் குழு தனது அறிக்­கையை ஏற்­க­னவே தயா­ரித்து விட்­ட­தா­கவும் அறிக்­கையில் குழு அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கடந்த 26 ஆம் திகதி ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் குழு அங்­கத்­த­வர்­களில் சிலர் கையொப்­ப­மிட்டு வேறோர் அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளார்கள். அவ்­வ­றிக்கை, குழு ஏற்­க­னவே தயா­ரித்­தி­ருந்த அறிக்­கையின் சிபார்­சு­க­ளுக்கு முரண்­பட்­டுள்­ளன. தற்­போது இரு அறிக்­கைகள் குழு­விடம் இருக்­கின்­றன என்றார்.

இதற்குப் பதி­ல­ளித்த நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள ‘இரு முரண்­பா­டான கருத்­துகள் கொண்ட அறிக்­கைகள் இருந்தால் பிரச்­சி­னை­யில்லை. அவற்றைச் சமர்ப்­பி­யுங்கள். நீதி­ய­மைச்சு அறிக்­கை­களை ஆராய்ந்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் என்றார்.

மாற்றுக் கருத்துக் கொண்­ட­வர்கள் சமர்ப்­பித்த அறிக்­கையில் 7 பேர் கையொப்­ப­மிட்­டுள்­ளார்கள். இவ்­வாறு கையொப்­ப­மிட்­ட­வர்­களில் பலர் கடந்த குழுவின் அமர்­வுக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. அதனால் அந்த சிபார்­சுகள் தொடர்பில் அன்று ஆரா­யப்­ப­ட­வில்லை. குழு ஏற்­க­னவே தயா­ரித்­துள்ள அறிக்­கையை சிலர் ஏற்றுக் கொள்­ளா­த­தி­னாலே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அறிக்கை ஷரீ­ஆ­வுக்கு முர­ணா­னது என்­கி­றார்கள்.

இதே­போன்ற பிரச்­சினை 1959 ஆண்­டிலும் ஏற்­பட்­டது. சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு 1959 ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட குழு­விலும் முஸ்­லிம்கள் கருத்து வேறு­பா­டு­களை வெளி­யிட்­டதால் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் ஏனைய இனங்­களின் சட்­டங்கள் திருத்­தங்­க­ளுக்­குள்­ளா­கின.

குறைந்த எண்­ணிக்­கை­யி­லான உல­மாக்கள் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தேவை­யில்லை என்­கி­றார்கள். ஆனால் நளீ­மி­யாவில் பயின்­ற­வர்கள் போன்ற உல­மாக்கள் சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்கள் தேவை என்­கி­றார்கள்.

குழு அங்­கத்­த­வர்­க­ளி­டையே –முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தாலும், இரு அறிக்­கைகள் தயா­ராக இருந்­தாலும் முரண்­பா­டு­களைக் களைந்து ஒற்­று­மை­யாக தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. சமூக நலனில் அக்­க­றை­யுள்­ள­வர்கள் பலர் எம்­முடன் கலந்­து­ரை­யாட வரு­கி­றார்கள். ஜமா­அத்தே இஸ்­லாமி வெள்­ளிக்­கி­ழமை (இன்று) எம்மைச் சந்­திக்­கி­றார்கள்.

இரண்டு கார­ணங்­க­ளி­னாலே குழுவின் அமர்­வுகள் சிறிது கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்­டன. பொது­ப­ல­சே­னாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை உக்கிரமடைந்திருந்த நிலையில் நாம் தாமதமானோம். அடுத்து 2014 இல் நான் சுகயீனமாக இருந்தபோது சிறிது தாமதமானதேயன்றி வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

கருத்து முரண்பாடுகள் கொண்டுள்ள குழு அங்கத்தவர்கள் இது விடயத்தில் ஒன்றுபடாது விடின் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Previous Post

விமானத்தை கடத்துவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை

Next Post

சம்மாந்துறையில் கருவாடு ஆகும் சடலம்

Next Post

சம்மாந்துறையில் கருவாடு ஆகும் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures