Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

December 2, 2017
in Sports
0
ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய கேப்டன் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசரவைத்துள்ளார் கோலி.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து எதிரணியைக் களங்கடித்ததோடு, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த இன்னிங்ஸில் 18 வது சதத்தைக் கோலி நிறைவு செய்தார்.

பின்னர், நாக்பூரில் கடந்த 24-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேப்டன் கோலியே காரணம் என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸில் கோலி இரட்டை சதம், அதாவது 213 ரன்கள் விளாசினார். இதன் மூலம் தனது 19வது சதத்தை அவர் நிறைவு செய்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் முரளி விஜய் 128 ரன்னும் புஜாரா 143 ரன்னும் ரோஹித் சர்மா 102 ரன்னும் அடித்தனர். ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நான்கு பேர் சதம் விளாசினர்.

டெல்லியில் இன்று 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி ரன்களைக் குவித்துவருகிறது. இந்த இன்னிங்ஸிலும் கோலி சதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4 வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி. 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105 வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். அடுத்தடுத்து கோலியின் சதத்தால் இலங்கை அணி மிரண்டு போய் உள்ளது.

அடுத்து ஒருநாள் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Previous Post

பிணைமுறி கொள்ளையர்களை, தூக்கிலிட வேண்டும் – ரஞ்சன்

Next Post

கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

Next Post
கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures