Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் விக்ரமசிங்கேயிடம் இந்திய ஜனாதிபதி உறுதி

November 24, 2017
in News
0

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.‘‘இலங்கையை ஸ்திரமான, வளமான நாடாக உருவாக்கும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற இந்தியா தனது ஆதரவை அளிக்கும்’’ எனவும் ரனில் விக்ரமசிங்கேயிடம் ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்தார்.இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியாவில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரனில் விக்ரமசிங்கேயிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு தனித்துவமானது; இணக்கமானது; தோழமையானது. இந்த உறவு வரலாறு, கலாசாரம், இனம், நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ‘‘வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, இந்திய, இலங்கை உறவின் முக்கிய அம்சம் ஆகும். இலங்கையுடனான தனது உறவின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது’’ என்றும் குறிப்பிட்டார். ‘‘இலங்கையை ஸ்திரமான, வளமான நாடாக உருவாக்கும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற இந்தியா தனது ஆதரவை அளிக்கும்’’ எனவும் ரனில் விக்ரமசிங்கேயிடம் ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோருக்கு மதிய விருந்து அளித்தார். பின்னர் இரு பிரதமர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட இலங்கையில் இந்தியா செய்துவரும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்தும் இருவரும் பேசினார்கள்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்போது, ‘‘இருதரப்பிலும் இருநாட்டு உறவுகள் குறித்தும், வரலாற்று ரீதியான, நட்பு ரீதியான இரு நாடுகளுக்கு இடையேயும் உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் முழுமையான அளவில் பேசப்பட்டது. இலங்கையில் இந்தியா இப்போது செய்துவரும் மேம்பாட்டு திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ள மேம்பாட்டு திட்டங்கள், மீனவர் பிரச்சினை உள்பட அனைத்து இருநாட்டு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்றார்.

பின்னர் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினர். அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மேல்சபை துணைதலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Previous Post

தேங்காய்க்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை

Next Post

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

Next Post

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures