அச்சுவேலி தொண்டமானாறு பகுதியில் அடை மழை காரணமாக ஓடும் வெள்ளம் வீதியினை மூடியதனால் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக அச்சுவேலி வல்லை மண்டான் மத்தொனி கரவெட்டி மற்றும் புத்தூர் பகுதிகளில்நேற்று(11) பெய்து கொட்டிய கனமழை காரணமாக தாழ்நிலபிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்பட்டது.
இதனால் மேற்படி இடங்களில் உள்ள வீதிகள் நீரில் முழ்கியதுடன் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டன.
இதனையடுத்து தொண்டமானாறு கடல் நீரேரிக்கு குறுக்கான கட்டப்பட்டிருந்த அணைக்கட்டின் 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ள நீர் கடலினை சென்றடைவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடல் நீரேரியினை அன்மித்த பகுதிகளில் ஒரளவு வெள்ளம் வழிந்தோடக்கூடியதனை காணக்ககூடியதாக உள்ளது.
இதனை தொடர்ந்து அப் பகுதிகளில் வெள் அபாய எச்சரிக்கை குறைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ். காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளது.
வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழுக்கை ஆறு வாய்க்காலின் 10 வான் கதவுகளும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

