Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

யானைகள் அட்டகாசம் இலாபம் பெறும் விவசாயிகள்!

October 24, 2017
in Life, News
0
யானைகள் அட்டகாசம் இலாபம் பெறும் விவசாயிகள்!

வழமையாக அதிகளவு சோளச் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் சோளச் செய்கையை மட்டுப்படுத்தி நிலக் கடலைக்கு மாறியிருப்பது அதிக இலாபமளிக்கும் உற்பத்தியாக மாறியிருக்கின்றது என மட்டள்ளக்களப்பு விவசாய திணைக்களத்தின் மறுவயற்பயிர் பிரிவுக்குப் பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் நல்லதம்பி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில், அறுவடைக்குத் தயாராக இருக்கும் சோளச் செய்கையை உண்பதில் காட்டு யானைகள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் விவசாயிகள் அதிக இழப்புக்களையும் மனச்சோர்வையும் சந்திக்க வேண்டி ஏற்பட்டது..

சில வருடங்களுககு முன்புதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது சுமார் 800 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நிலக்கடலைச் செய்கையை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சோளச் செய்கையைக் கைவிட்டு நிலக்கடலைச் செய்கைக்கு மாறியிருப்பது அவர்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டக்கூடியதாகவுள்ளது. 1 ஏக்கரில் சுமார் 96 ஆயிரம் ரூபாவை விவசாயிகள் நிகர இலாபமாக பெறக்கூடியதாகவிருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலைக்காக ஏற்படும் மொத்த உற்பத்திச் செலவு சுமார் 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

விளைந்த நிலக்கடலைச் செடிகளை நிலத்திலிருந்து பிடுங்கும் இயந்திரம், நிலக்கடலை விதைகளை செடிகளிலிருந்து அகற்றும் இயந்திரம் உட்பட நிலக்கடலை உற்பத்திக்கானசகலஇயந்திராதிகளும் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. மாவட்டத்தில்6 இயந்திரங்கள் விவசாயிகளுக்காக அவர்களது விவசாய அமைப்புக்களுக்கு பொதுவில் வழங்கப்பட்டுள்ளன.

அந்த இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 2 தொடக்கம் 4 எக்கரில் நிலக்கடலை அறுவடையைச் செய்ய முடியும். முன்னரென்றால் ஒரு ஏக்கர் செடிகளிலிருந்து பிரித்தெடுப்பதற்கு சுமார் 15 தொழிலாளர்கள் தேவையாகவிருந்தது. இப்பொழுது தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினூடாக வழங்கியுள்ள இந்த இயந்திரங்களைக் கொண்டு காய்ந்த செடிகளில் இலகுவாக அகற்ற முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தப் பெரும்போகத்தில் விதை நிலக்கடலையை உற்பத்தி செய்யும் 1940 கிலோ விதை வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு 30 ஏக்கரில் திலக்கடலையைப் பயிரிட்டு ஏக்கருக்கு 800 கிலோ விளைச்சல் என்ற எதிர்பார்ப்புடன் சுமார் 40 ஆயிரம்கிலோ அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை திலக்கடலையை உற்பத்தி செய்யமுடியும்.

இதைத் தவிர துகர்வுக்கான நிலக்கடலை 5400 கிலோ விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 50 வீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் இவற்றை நாம் விவசாயிகளுக்கு வழங்குகின்றோம். தற்போது உள்ளூர் விவசாயிகள் மறுவயற் பயிர் உற்பத்திக்காக ஊக்குவிக்கப்படுவதால் மறுவயற் பயிர்விதைகளுக்கு மட்டக்காப்பு மாவட்டத்தில் நிலவும் தட்டுப்பாடு எதிர்காலத்தில் முழுமையாக நீங்கும் என எதிர்பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவளையாறு, மாவடியோடை, புத்தம்புரி, மாலையர்கட்டு, கதிரவெளி, ரொன், குடும்பிமலை, புலிபாய்த்தகல் உள்ளிட்ட பல இடங்களில் திலக்கடலை உற்பத்தி செய்யப்படுகின்றது என்றார்.

Previous Post

தந்தையின் வெறிக்கு இரையான 10 வயது மகள்!!

Next Post

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Next Post
கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures