Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

October 21, 2017
in News, Politics
0
கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

நாட்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதீப பிரணாம’ விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணி இன்று எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படுகிறது என்பது கேள்விக்கிடமாகவுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்துப் பொறுப்புக்களும் அரசியல்வாதிகளிடம் மட்டும் விட்டுவிடப்படுவதாக சமூகத்தில் நிலவும் பிழையான கருத்து விரைவில் சரி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் குரல் அத்தியாவசியமானதாகும் என்பதுடன், அவர்கள் தாமதமின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இனப்பிரச்சினையிலும், நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்திலும் சிறந்ததோர் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் பக்கசார்பற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏனைய சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களது அறிவு மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார்.

எமது நாடு கல்விமான்களை உருவாக்குவதில் எந்த வகையிலும் பின் நிற்காதபோதும், நாடு குறித்து சிந்திக்காது கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வது அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரிய சவாலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதிகள் என்ற வகையில் அதற்குத் தீர்வு வழங்க முற்படுகையில் அதனை அரசியல் சார்பானது என சிலர் அடையாளப்படுத்த முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறானபோதும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான தருணம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் இருந்து உருவான திறமைவாய்ந்தவர்களை பாராட்டுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 42 பேர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

Previous Post

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Next Post

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

Next Post
வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures