வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ராயல்சீமா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.













