குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.
ஒரு படகில் நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் ஒருவர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.